18 வயதான யுவதி, கொவிட் தொற்றில் உயிரிழப்பு  

Date:

வத்தளை பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியொருவர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

வத்தளை ஹேமாஸ் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த யுவதி, கடந்த 21ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இருதய நோய்யுடன், கொவிட் நியூமோனியா ஏற்பட்டமையே, இந்த உயிரிழப்புக்கான காரணம் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புடன், மேலும் மூன்று உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஆண்ணொருவரும், பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஆண்ணொருவரும், மஹரகம பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக 638 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...