இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று காலை வெளியாகியுள்ள தகவல்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிய கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் புதிய தொ ற்றாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 430 ஆக காணப்பட்டது.
தற்போது இந்தியாவில் அதைவிட புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 59 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலைக்கு இந்தியா வந்துள்ளது. தினசரி மரணங்களின் எண்ணிக்கையும் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது .
இந்தியாவில் தற்போது பரவி வருவது இரட்டை உருமாற்ற வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது சூப்பர் பரவல் வேகம் கொண்டது அதாவது அதிகமான பரவல் வேகம் கொண்டது என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் நிலைமை நாளுக்கு நாள் இந்தியாவில் மோசமடைய தொடங்கியுள்ளது. சில வைத்திய சாலைகளில் வைத்தியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .