தமிழகத்தில் 234 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் ஆரம்பம் 

Date:

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு

மாலை 7 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.பல தொகுதிகளில் அதிகாலையில் இருந்தே வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருப்பு. 234 தொகுதிகளில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டி வாக்குகளை செலுத்துவதற்காக 88,937 வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பு தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர்.

1,29,165 வாக்களிக்கும் எந்திரங்களும், 91,180 கட்டுப்பாட்டு எந்திரங்களும் தயார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 1.58 லட்சம் போலீசார் பாதுகாப்பு.537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை- 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- தேர்தல் ஆணையம்

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வாக்குச்சாவடிகளில் கூடுதல் ஏற்பாடுகள் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்துதான் வரவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு, வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர்கள் வழங்கப்படும்.

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கையுறை வழங்கப்படும்,12 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு,கொரோனா நோயாளிகள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை பிபிஇ உடை அணிந்து வாக்களிக்க அனுமதி.

அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள்- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு. அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள்- வங்கி அல்லது தபால்நிலையங்களில் வழங்கப்பட்ட கணக்குப் புத்தகம்,அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள்- ஊரக வேலை உறுதித் திட்ட பணி அட்டை

அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள்- எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்கு வழங்கப்படும் அட்டை, மத்திய-மாநில அரசு நிறுவனங்கள் வழங்கும் அட்டை, அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள்- மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு அட்டை.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...