நாட்டில் தற்போது நிலவும் உஷ்ணமான மற்றும் வறட்சியான காலநிலை காரணமாக பல இடங்களில் குடிநீர் விநியோகத்தில் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தேசிய நீர் விநியோக வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் நீர்த்தேக்கப் பிரதேசங்களில் போதிய அளவு மழை வீழ்ச்சிப் பெறப்படாமை காரணமாக பல இடங்களில் வறட்சியான காலநிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் உஷ்ணமான காலநிலையாலும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நீரின் தேவையும் அதிகரிக்க உள்ளதால் நாட்டின் சகல இடங்களுக்கும் சம அளவான அழுத்தத்தோடு நீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியாமல் இருக்கும் என நீர் விநியோக சபை அறிவித்துள்ளது. பெரும்பாலும் நாட்டின் மேட்டுப் புறமான பகுதிகளில் வாழும் மக்களே நீர் விநியோகப் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.