பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள அரபு நாடுகளின் உதவியை நாடும் அரசாங்கம்

Date:

நாட்டில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார நிலையை சீர் செய்யும் வகையில் அரசாங்கம் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் நேரடி உதவியை நாடி உள்ளதாக இன்று வெளியாகியுள்ள வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்று பிரதான தலைப்புச் செய்தி தந்துள்ளது. இந்த செய்தியின் படி நாட்டின் எரிபொருள் இறக்குமதி
மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கை நாணயத்தின் பெறுமதி சர்வதேச அரங்கில் மிகமோசமான வீழ்ச்சியை கண்டு ள்ளமை ஆகும் இந்த நாணய வீழ்ச்சி காரணமாக ஏற்கனவே எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு செலுத்த வேண்டிய தொகையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது தற்போது செலுத்தப்பட வேண்டிய தொகை டொலர் ஒன்றின் விலை 180 ரூபாவாக இருந்த போது இறக்குமதி செய்யப்பட்டதாகும். ஆனால் இப்போது டொலர் ஒன்றின் விலை 202 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில் நாணய விகிதாசாரப்படி மொத்தமாக சுமார் 3 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை எரிபொருள் இறக்குமதிக்காக மேலதிகமாக செலுத்த வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார வீழ்ச்சி மற்றும் எதிர்கால எரிபொருள் தேவை என்பனவற்றை கருத்தில் கொண்டு அரசாங்கம் முதல் தடவையாக சம்பந்தப்பட்ட அரசாங்கங் களுடன்
ஒப்பந்தங்களை நேரடியாக செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி சவுதி அரேபியா கத்தார் குவைத் ஓமான் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய பிரதான எண்ணெய் உற்பத்தி நாடுகளோடு நேரடிப் பேச்சுவார்த்தைகளும் உள்ளூரில் உள்ள அந்த நாடுகளின் தூதுவர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த செய்தியின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. இதுவரை அரசாங்கம் எரிபொருள்களை
சம்பந்தப்பட்ட நாடுகளின்
பிரதான கம்பெனிகள் மூலமாகவே இறக்குமதி செய்து வருகின்றது. ஆனால் அதை விடுத்து மிகக் குறைந்த விலையில் சலுகை அடிப்படையில் நீண்ட காலத்தில் திருப்பி செலுத்த கூடிய கடன் வசதி அடிப்படையில் அரசாங்கங்களிடம் இருந்து நேரடியாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கைகளை செய்து கொள்வதில் அரசு ஆர்வம் காட்டி வருவதாக இந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எண்ணை இறக்குமதி நேரடியாக இடம் பெறும் பட்சத்தில் குறிப்பிட்ட நாடுகளின் அரசுகளிடம் இருந்து பாரிய சலுகையை இலங்கை அரசு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரியவருகின்றது. ஆனால் ஒருபுறம் உள்ளுரில் முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள் பல்வேறு வழிகளில் அதிகரித்துவரும் அரசாங்கம் இன்னொரு புறத்தில் தன்னுடைய பொருளாதார மீட்சிக்காக அரபு நிடுகளிடமிருந்து உதவிகளையும் எதிர்பார்த்திருப்பது வேடிக்கையான ஒரு அனுகுமுறை என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி  விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்காலங்களில் மாணவர்கள் மற்றும்...

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 1818 தொலைபேசி இலக்கத்துக்கு 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு...

புதுப்பிக்கப்படும் அஸ்வெசும தகவல்கள்!

அஸ்வெசும வருடாந்த தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது. 2023ம்...