கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டு பணியகமும் எலையன்ஸ் டிவலோப்மென்ட் டிரஸ்ட் (ADT) நிறுவனமும் இணைந்து, இன்று 04.21.2021 புதன்கிழமை ஏற்பாடு செய்த, கொவிட் 19 இல் இருந்து மக்களை பாதுகாத்தல், கொவிட் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை வழங்குதல் சம்மந்தமான ஒரு உயர்மட்ட கலந்துரையாடல் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் Dr.சுசில் பெரேரா அவர்களும், சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர், DR. பாலித பெரேரா அவர்களும் இன்னும் உயர்மட்ட அதிகாரிகளும் சர்வமத சமாதனப் பேரவையின் அங்கத்தவர்களும் ஏனைய மதத்தலைவர்களும் இக் கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட னர்.
இக் கலந்துரையாடலில், நாடுதழுவிய ரீதியில் மதஸ்தாபனங்கள் மூலம் எவ்வாறு கொவிட் 19 இல் இருந்து மக்களைப் பாதுகாப்பது அதே போன்று கொவிட் தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்ச்சியை எவ்வாறு சமூகமட்டத்தில் ஏற்பாடு செய்வது என்ற இரண்டு முக்கிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டு மதஸ்தாபனங்களுடனும் சுகாதார திணைக்களத்தினுடனும் இணைந்த வகையில் எதிர்காலத்தில் பணிகளை மேற்கொள்வது தொடர்பான கருத்துக்களும்
தீர்மானங்களும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.