நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளின் போது செயல்பட்டு வரும் அத்தியாவசிய சேவைகள் குறித்து பொதுமக்கள் விசாரிக்க புதிய அவசர இலக்கம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் தங்கள் விசாரணைகளுக்காக 1965 அவசர இலக்கம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் கட்டணமில்லா 24 மணி நேர இச் சேவை இன்று முதல் செயல்படும்.
தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக இலங்கையில் அமல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளின் போது அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.