ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் – மக்களே அவதானம்..!: நாகலிங்கம் மயூரன்

Date:

மிகவும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் தற்போது இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சம் பேரில் 54 பேர் தொற்றுக்கு உள்ளானவர்கள் அறியமுடிவதுடன், வாழைச்சேனை பிரதேசத்தில், 129 ஆகவும் மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் 55 ஆகவும் குறிப்பிடப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று மரணமானது, 2.1 வீதமாகவும்தேசிய ரீதியில் 0.1 வீதமாக காணப்படுகின்றது. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று மடங்குக்கு மேலாக மரணவீதம் காணப்படுகின்றது. இதனால் மரண வீதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாகவுள்ளதென கூறலாம் என்றார்.

எனவே மக்களாகிய நீங்கள் இதனுடைய ஆபத்து நிலையை அறிந்து கொண்டு சரியான இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணவேண்டும். கடந்த 24 மணித்தியாலத்தில் 28 கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளது.

இருமல், தடுமல் சுவாச எடுப்பதற்கு கஷ்டமாக இருந்தால் உடனடியாக பக்கத்திலுள்ள வைத்தியரை நாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...