இந்தியா போன்று இலங்கை மாறும் அபாயம் என எச்சரிக்கை

Date:

 

இந்தியா போன்று இலங்கை மாறும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை வைத்திய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் நிலைமைக்கமைய ஒரு வேலைத்திட்டத்தை பின்பற்றி வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தாமல் இருப்பதற்கு தீரமானம் மேற்கொள்ளவில்லை என்றால் இந்தியா போன்ற நிலைமை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் மிகவும் பொறுப்புடன் சுகாதார ஆலோசனைகளை பிற்பற்றுமாறு சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணசேகர பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களுக்கு உரிய சுகாதார முறையை பின்பற்றவில்லை என்றால் நிச்சயம் இந்தியாவின் நிலைக்கு தள்ளப்படுவோம்.

வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் ஏனையவர்களும் முகக் கவசம் அணிந்து மிகவும் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். இல்லை என்றால் வீட்டில் அனைவருக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டு நாடு அபாய கட்டத்தை நோக்கி சென்று விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...