L.T.T.E இனர்
ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதாக பிரகடனம் செய்யப்பட்ட
இன்றைய தினமான மே மாதம் 18 ஆம் திகதி
தேசிய படை வீரர்கள் தினமாக வருடம்தோறும்
அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது .
அந்த அடிப்படையில் இன்று அனுஷ்டிக்கப்படும் 12வது தேசிய படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு இலங்கை ராணுவத்தின் 452 அதிகாரிகளுக்கும் 4289 ஏனைய தரத்தை சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன .
இவர்கள் அனைவரும் தத்தமது அடுத்தக்கட்ட பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்
ராணுவத் தளபதி
ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய
இந்த பதவி உயர்வுகளை இன்றைய 12வது தேசிய படை வீரர்கள் தினம் முதல்
அமுலுக்கு வரும் வகையில்
வழங்கியுள்ளார்இலங்கை ராணுவத்தில் அண்மைக்காலத்தில் வழங்கப்பட்டுள்ள
மிகப்பெரிய பதவி உயர்வு எண்ணிக்கை இதுவென்று இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது .