இருபது இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க தீர்மானம்!

Date:

நாட்டின் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் கணக்குகளை இடை நிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கான அரச கட்டமைப்பிலுள்ள நிறுவனங்களின் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழக்கத்திலுள்ள சட்டத்திற்கு அமைய வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதற்கு அமைச்சர் அலி சப்ரியும் தானும் இணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றதும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உரிமையாளர்கள் இல்லாத பேஸ்புக் கணக்குகளின் மூலம் பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன.

இளம் சந்ததியினரை வழி கெடுக்கும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை தூண்டுவதற்கும் இது வழி வகுப்பதாக கண்காணிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேசிய பாதுகாப்பையும் சிறந்த சமூக கட்டமைப்பையும் வழிநடத்தி செல்லும் பொருட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

வெற்றிகரமாக நடைபெற்ற தேசிய மஸ்ஜித் நம்பிக்கையாளர்கள் வழிகாட்டல் நிகழ்சித்திட்டம்

இலங்கை வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்...

மக்கா புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலின் முஅத்தின் ஷேக் இப்ராஹிம் அல்-மதனி காலமானார்!

மக்கா புனித மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலின் அதிகாரப்பூர்வ முஅத்தினான (தொழுகைக்கான அழைப்ப...

சீரற்ற வானிலை காரணமாக 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (21) 38...

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை; செயல்முறை பரீட்சை அட்டவணை அறிவிப்பு!

026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் இந்த...