உலக புகையிலை எதிர்ப்பு நாள்

Date:

உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும். புகை பிடிப்பதனால் புற்றுநோய்க் கூட ஏற்படும். புகை பிடிப்பதால் மூச்சி எடுக்கும், மயக்கம் வரும், இருமல் வரும். தொடர்ந்து புகைப்பதனால் உடல் எதிர்ப்புசக்தியை இழந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஏன் மரணம் கூட ஏற்படலாம்.

ஒவ்வோர் ஆண்டும் புகையிலை பயன்படுத்துவதால் உலகில் 70 லட்சம் பேர் பலியாகின்றனர். இதில் 15% பேர் புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதாலேயே பலியாகிறார்கள்.  உலகில் இறக்கும் 10 பேரில் ஒருவர் புகை பிடிப்பதால் இறக்கிறார்.
“புகையிலை தன் உயிரைக் கெடுக்கும் அடுத்தவன் உயிரையும் கெடுக்கும்.”

முடிந்தவரை புகை பழக்கத்தை நிறுத்திக் கொள்வது நல்லது. புகை பிடிப்பவரின் அருகில் இருந்து விலகி இருக்க வேண்டும். முக்கியமாக இளம் சமுதாயத்தை புகை பழக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தலா ரூ. 25000!

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...