எவன்கார்ட் நிறுவன மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கில் இருந்து எவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட பிரதிவாதிகள் 8 பேரையும் விடுதலை செய்ய கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதித்ய பட்டபெதிகே, மஞ்சுல திலகரத்ன மற்றும் மஹேன் வீரமன் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபரினால் கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றத்தில் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.