கடந்த மாதத்தில் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 1959 ஆக பதியப்பட்டுள்ளது. அதில் 205 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1254 பேர் காயமரடைந்துள்ளனர்.

இலங்கையின் வாகன விபத்து புள்ளி விபரவியலின்படி, அதிகமான வாகன விபத்துக்கள் ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளன. இவ்வாறு ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் அதிகமானவை (768) மேல் மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் வடமேல் மாகாணம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் எண்ணிக்கை 238 ஆகும்.

இதன்படி, ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 51 வீதமானவை மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களே இந்த விபத்துக்களில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த புள்ளி விபரத்திற்கு அமைவாக மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாக, வாரத்தில் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் இடம்பெற்ற நாளாக திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.

இதேவேளை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரையிலான காலப்பகுதியில் அதிகமான வாகன விபத்துக்கள் இடம்பெற்றிருப்பது மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Popular

More like this
Related

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா: போருதோட்டையில் ஆரம்பம்

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள்...

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க...

வரலாற்றுச் சாதனை: சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலிடம் பிடித்து நைஜீரிய பெண் மாபெரும் பெருமை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது 'அப்துல் அஜீஸ் மன்னர்...

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகை சௌகார்...