கொழும்பு துறைமுக நகர வேலை வாய்ப்புகளில் 75% இலங்கையர்களுக்கே – பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

Date:

நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கொழும்பு துறைமுக நகரில் ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்புகளில் 75% மானவை இலங்கையர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கான சிறப்பு திறன்கள் இலங்கையருக்கு இல்லாத போது குறித்த விதிமுறைகளை தளர்த்துவதற்கு ஆணைக்குழு இடம் அளிக்க வேண்டும் என பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவில் பெரும்பான்மையானவர்கள் இலங்கையர்களாக இருக்க வேண்டும் எனவும் அதன் தலைமை இலங்கையருக்கு கிடைக்க வேண்டும் எனவும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை சட்டமூலத்தில் உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...