சீனாவிலிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட 600,000 சைனாஃபார்ம் தடுப்பூசிகளில், 375316 முதல் தடுப்பூசியாகவும் 2435 இரண்டாவது தடுப்பூசியாவும் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் 2865 முதல் தடுப்பூசிகளும், 2435 இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் இலங்கையில் உள்ள சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும், நேற்றைய நிலவரப்படி 925,242 முதல் தடுப்பூசிகளும் மற்றும் 97077 இரண்டாவது தடுப்பூசிகளும் மற்றும் ஸ்பூட்னிக் 14699 முதல் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.