தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ராஜினாமா செய்த பழனிசாமி.. மே 7-ல் பதவியேற்கும் ஸ்டாலின்!

Date:

தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று, மே 2-ம் தேதி காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிஒட்டது. இன்னும் ஒரு சில தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின், வரும் வெள்ளிக்கிழமை, அதாவது மே மாதம் 7-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை திமுக எம்.எல்.ஏ க்கள் கூட்ட நடைபெற இருக்கிறது. அதில் அவர் முறைப்படி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்..

இதனிடையே, தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் தமிழக முதல்வராக இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்… !

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...