நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 369 பேர் கைது!

Date:

நாட்டில் 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 369 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஒக்டோபர் 30 ஆம்திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மொத்தமாக 12, 130 பேர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு உட்பட்ட விதிகளை மீறுபவர்களை கண்டறியும் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...