நாளை 51 ரயில்கள் சேவையில்!

Date:

நாளை (17) தொடக்கம் அத்தியாவசிய பணிக்காக செல்லும் பயணிகளுக்காக விசேட ரயில்கள் சிலவற்றை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த ரயில்களில் தொழிலுக்கு செல்பவர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என ரயில்வே பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

சுமார் 51 ரயில்கள் நாளை இயக்கப்பட உள்ளதாகவும் மாலையிலும் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தொழிலுக்காக செல்லும் பயணிகளுக்காக நாளை தொடக்கம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவைக்கு ஏற்ப மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...