நைகரில் படகு விபத்து! 140 பேர் மாயம்!

Date:

நைகர் ஆற்றில் 160 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

படகு மத்திய நைகர் மாநிலத்தை விட்டு வெளியேறி வடமேற்கு கெப்பி மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அது நீரில் மூழ்கி காணாமல்போனதாக ந்காஸ்கி மாவட்ட நிர்வாகத் தலைவர் அப்துல்லாஹி புஹாரி வாரா தெரிவித்துள்ளார்.

மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாகவும், 22 பேர் மீட்கப்பட்டதுடன், ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 140 பேரை காணவில்லை என்றும் அவர் கூறினார்.

நைகரில் படகு விபத்துக்கள் இடம்பெறுவது ஒரு பொதுவான நிகழ்வாகியுள்ள நிலையில், இம் மாத தொடக்கத்தில் மத்திய நைகர் மாநிலத்தில் அதிக சுமை கொண்ட படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...