இஸ்ரேலுக்கும், காஸாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. கடந்த 8 நாட்களாக இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தி வருகிறது.
இம்மோதலில் 192 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் காஸாவில் வாழ்ந்த 55 குழந்தைகள் கொல்லப்பட்டள்ளனர். ஹமாஸ் இயக்கத்தின் தலைவரின் வீடு தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் போது அவர் இங்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.