பாகிஸ்தானிலும் தற்போது covid-19 தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதால் எதிர்வரும் ரமழான் பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஒன்பது நாள் முடக்க நிலை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் இந்த ஒன்பது நாள் முடக்க நிலை அமல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது .
சுற்றுலாத் துறை உட்பட மக்களுடைய அன்றாட போக்குவரத்துக்கள் கூட இதன் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொவிட் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது பாகிஸ்தானுக்குள்ளும் அது வேகமாகப் பரவக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே ஒரு முன்னேற்பாடு கருதியே இந்த பண்டிகை கால முடக்க நிலையை அமுலுக்கு கொண்டு வருவதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது
இதன்மூலம் பண்டிகைக்கால பொருள்கள் கொள்வனவு முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது