கொவிட் 19 தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக வேண்டி நாடு தழுவிய பிரார்த்தனையின் ஓர் அங்கமாக புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளியில் பிரார்த்தனை நிகழ்வுகள் சனிக்கிழமை (08) மாலை 05.46 தொடக்கம் இடம்பெற்றது.
கொவிட் 19 தொற்றிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க விஷேட பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
பெரிய பள்ளியின் பிரதம பேஷ் இமாம்களான அஷ்ஷெய்க் எம்.எப்.எம்.சிஹான், அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.ஜெஸ்கான் ஆகியோர் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.
கொவிட் 19 சுகாதார வழிமுறைகளை பேணி இந்நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது.
உலகை உலுக்கி வரும் கொரோனா தொற்று நீங்கி சுபீட்சமானதொரு வாழ்வு மலர, உலக மக்களின் நன்மையையும் இலங்கை வாழ் மக்களின் நன்மையையும் வேண்டி சர்வமத பிரார்த்தனையை ஒரே நேரத்தில் சனியன்று மாலை 5.46 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கையிலுள்ள சகல மதத் தலங்களிலும் வழிபாட்டு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரூசி சனூன் புத்தளம்