பைசர் நிறுவனம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க எதிர்பார்ப்பு!

Date:

எதிர்வரும் 3 மாதங்களில் 1 இலட்சம் தடுப்பூசிகளையும், அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் தடுப்பூசிகளையும் இலங்கைக்கு வழங்க பைசர் நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ´ஸ்புட்நிக்´ என்ற கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கின்றது.

மக்களுக்கு முறையான விதத்தில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றதா? என்பதை ஆராய்ந்த பின்னர் இந்தத் தடுப்பூசி தொகையை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்தது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியாவின் ´சீரம்´ நிறுவனத்திடமிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைத்திருந்தன.

இதனைத் தொடர்ந்து சீனாவிடமிருந்து 6 இலட்சம் ´சைனோபாம்´ தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்தன. இதேவேளை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் அமெரிக்காவின் ´பைசர்´ நிறுவனத்துடனும், ரஷ்யாவின் ஸ்புட்நிக் நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றன.

ஸ்புட்நிக் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு 13 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவிருக்கின்றன. பைசர் நிறுவனம் இந்த மாதத்தில் 35 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

எதிர்வரும் 3 மாதங்களில் 1 இலட்சம் தடுப்பூசிகளையும், அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் தடுப்பூசிகளையும் இலங்கைக்கு வழங்க பைசர் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக விநியோகிக்கப்படும் அஷ்ரா செனேக்கா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையும் தற்சமயம் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...