பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Date:

கடந்த 24 மணித்தியாலங்களில் காலி மாவட்டத்தில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, அயகம, கலவான, குருவிட்ட, நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் கிரிஎல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு, மண்திட்டு உடைந்து வீழ்தல், கற்கள் சரிதல், போன்ற அபாயம் காணப்படுவதனால், மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

நெலுவ, எல்பிட்டிய, பத்தேகம, தவலம, காலி, யக்கலமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, அகலவத்த, வலல்லாவிட்ட, மத்துகம, தொடங்கொட, இங்கிரிய, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்த பிரதேச செயலாளர் பிரிவும் மண்சரிவு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தில் நாகொட, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க, இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல, தெஹம்பவிட்ட ஆகிய மண்சரிவு அபாய வலயங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...