பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி!

Date:

நாளையும், நாளை மறுதினமும் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும்.

அத்தோடு இன்று இரவு தொடக்கம் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இதற்கான அனுமதி உணவு, காய்கறி, மீன் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய உற்பத்திகளை விநியோகிக்கும் லொரி மற்றும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றுக்காக விசேட அனுமதிப்பத்திரம் தேவை இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

சில்லறை வர்த்தகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் மத்திய நிலையஙகளில் பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியும்.

இதேவேளை, பேலியகொடை மீன் சந்தையும் நாளை மீண்டும் திறக்கப்படும்.

Popular

More like this
Related

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...