மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதியின் நலன் விசாரித்த பிரதமர்!

Date:

தனது வீட்டின் முன்னால் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீடின் தந்தைக்கு இன்று (11) அலரி மாளிகையில் இருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நஷீட் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.

முன்னாள்ஜனாதிபதி மொஹமட் நஷீடின் தந்தை அப்துல் சதாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர், நஷீடின் நலன் குறித்து விசாரித்ததுடன் அவர் குணமடைவதற்காக ஏதேனும் உதவிகள் தேவைப்படின் அது குறித்து அறிவிக்குமாறும் குறிப்பிட்டார்.

கடந்த 6 ஆம் திகதி இரவு மாலைத்தீவில் உள்ள அவரது வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிக்கொண்டிருந்த போது மொஹமட் நஷீட் இக்குண்டு வெடிப்பிற்கு இலக்காகினார்.

குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்த அவர் 16 மணிநேர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரதமர், ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மாலைத்தீவின் ஜனாதிபதியாக (2008-2012) சேவையாற்றியவர் மொஹமட் நஷீட் ஆகும்.

அவர் இலங்கை மற்றும் மாலைத்தீவு இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவராவார்.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...