ரிஷாத் மற்றும் பிரேமலாலுக்கு பாராளுமன்றம் வர அனுமதி!

Date:

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடந்த தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு 3 மாத தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

அதேபோல், கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...