தவறான முறையில் 6 இலக்கம் கொண்ட குறீயீடு வட்ஸப் மூலம் கிடைக்கப்பெற்றால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.
உங்களுக்கு தெரிந்த ஒரு நபரிடமிருந்து குறித்த செய்தி கிடைக்கப்பெற்றால் அவர்களுடைய வட்ஸப் கணக்கு தடைப்பட வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இதற்காக இரண்டு காரண உறுதிப்படுத்தல் அமைப்பை (two factors) செயற்படுத்துமாறு TRCL மேலும் வட்ஸப் பயனாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.