வெசாக் அலங்காரங்களில் பொலித்தீன், பிளாஸ்ரிக்கை முற்றாக தவிர்க்கவும் – சுற்றாடல் அமைச்சு

Date:

வெசாக் தினத்தை முன்னிட்டு இடம்பெறக்கூடிய அலங்கார செயற்பாடுகளின்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை முற்றாக தவிர்க்குமாறு பொதுமக்களிடம், சுற்றாடல் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுற்றுச்சூழலில் அதிகளவில் பொலித்தீன்கள் சேர்வதை தடுக்கும் வகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் வருடாந்தம் 58 பில்லியன் ரூபா செலவில் 177,197 டொன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் இறக்குமதி செய்வதாக தெரிவித்துள்ளது.

எனினும் 12,636 டொன் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன்களையே மீள் சுழற்சி செய்ய கூடியதாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 92.29 சதவீதமானவை சுற்றுச்சூழலில் கலந்துவிடுவதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...