அநுராதபுரத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அநுராதபுரம் தனியார் வங்கி ஒன்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த தனியார் வங்கியில் ATM இயந்திரத்திர் பணத்தை வைப்பிலிட பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் மற்றுமொரு நபரும் வருகைத்தந்துள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களிடமிருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளனர்.
இதில் ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.