X-Press Pearl கப்பலின் சிதைவுகள் மற்றும் இரசாயண அமிலங்களால் பாதிக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவறும்
பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் விஜய மொன்றை மேற்கொண்டார்.
இப்பாதிப்பு தொடர்பாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் , கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை துறை அதிகாரிகளுடன் கடற்கரைகளை பாதிக்கும் இந்த காரணிகள் தொடர்பாகவும், நீர்வாழ் விலங்குகள் மற்றும் கடல்வளங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
இப்பகுதிகளில் வசிக்கும் மீனவர்களை மீன் பிடிப்பதைத் தவிர்க்குமாறு அராசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, இப்பகுதி மீனவர்களை சந்தித்த செந்தில் தொண்டமான், அவர்களின் வாழ்வாதரம் தொடர்பாக கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.