இஸ்ரேலுக்கும் பலஸ்தீன ர்களுக்கும் இடையிலான மோதல் கடந்த 6 நாட்களாக மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்காவின் சமாதான பிரதிநிதி ஒருவர் தற்போது டெல் அவிவ் நகரில் வந்து சேர்ந்து உள்ளதாக இன்று காலை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாதி அம்ர் என்ற அமெரிக்க பிரதிநிதி தற்போது இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனம் மற்றும் ஐக்கிய நாடுகள் அதிகாரிகளை சந்தித்து தற்போது இடம்பெற்று வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான யுத்த நிறுத்தம் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் பாலஸ்தீனமும் இணக்கம் தெரிவிக்குமா அதற்கான நிபந்தனைகள் எவ்வாறு அமையும் என்பது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இருந்தாலும் அமெரிக்க பிரதிநிதி பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கையோடு இஸ்ரேல் வந்துள்ளார். கடந்த ஆறு தினங்களாக இடம்பெற்ற மோதல்களில் இதுவரை 133 பலஸ்தீனர்கள் மரணமடைந்துள்ளனர்.
8 இஸ்ரேலியர்களும் மரணமடைந்துள்ளனர். முன்னரை விட இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் ஹமாஸ் இயக்கத்தில் இருந்து தீவிரமடைந்துள்ளதாகவே புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலையும் காஸா பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் மூன்று இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.