குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் ஆனால் சட்டத்திற்கு புறம்பாக அரசாங்கம் நடத்திய சட்டவிரோத கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அரசாங்கம் சர்வாதிகாரமாகவும் ஒரு தலைபட்சமாகவும் நகர்கிறது என்றும் அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்நகரும் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (13) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்தே இதனைத் தெரிவித்திருந்தார்.
அது மட்டுமல்லாமல், பெலிஸ்துறையினர் ஒரு சந்தேக நபரைக் கொல்லும்போது, அந்த அரசு சட்டவிரோதமாக ஆட்சி செய்யும் ஒரு பாசிச அரசாக மாறுகிறது, மேலும் இதுபோன்ற கொலைகள் மூலம், அரசியல்வாதிகள் மற்றும் சந்தேக நபரைக் கையாளும் உயர்மட்ட மோசடி செய்பவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியுமான வாய்ப்புகள் உருவாகிறது.
இது சட்டத்தின் ஆட்சியைக் குறைத்து, சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை இல்லாமலாக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
வலையொளி இணைப்பு-
https://youtu.be/Knjmqd8N1LY