அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற கொவிட் பரவல் தடுப்பு தீவிர நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில்
இலங்கை கடற்படையும்
தனது பிரதான முகாம்களில் ஒன்றான தென்பகுதியில் உள்ள காலி பூஸா முகாமில்
இடைக்கால தடுப்பு பராமரிப்பு நிலையம் ஒன்றை நிறுவியுள்ளது
கடற்படையின் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு இந்த முகாமில் பயன்படுத்தப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் ஒன்று தற்போது இடைக்கால கொவிட் தடுப்பு முகாம் ஆக மாற்றப்பட்டுள்ளது. இங்கு 150 படுக்கைகளுடன் கூடிய 12 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு 12 படுக்கைகளுடன் கூடிய
அதி தீவிர சிகிச்சை பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது .
இரண்டு வைத்தியர்கள் உட்பட பல அதிகாரிகளையும் கடற்படை இதில் சேவை புரிய ஒதுக்கியுள்ளது. நேற்று முதல் இந்த நிலையத்தில் கொவிட் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேநேரம் கம்பஹாவிலும் இதுபோன்ற ஒரு நிலையத்தை கடற்படையினர் உருவாக்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
கம்பஹா
வெரலவத்தை பிரதேசத்துக்கு அருகில் இந்த தடுப்பு முகாமை இலங்கை கடற்படை மே மாதம் 2ஆம் தேதி முதல் செயல்படுத்தி வருகின்றது. இதற்குத் தேவையான வைத்திய அதிகாரிகள் மற்றும்
நிபுணத்துவ ர்கள் எல்லோருமே இலங்கை கடற்படையை சேர்ந்தவர்களாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .