இந்தியாவின் கொரோனா நோயாளி ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “

Date:

இந்தியா பிராந்திய வல்லரசாக தன்னைத் தானே போற்றிக் கொண்டு உலக வல்லரசாக உலா வருவதற்கு கனவு கண்ட நாடு. ஆனால் உள்நாட்டில் அதன் மக்களுக்கு தேவையான அடிப்படை சுகாதார வசதிகள் கூட அங்கு இல்லை என்பது இப்போது உலக ஊடகங்களின் பிரதான தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இந்தியாவுக்கு ஆபத்து என்றதும் உலக நாடுகள் பல முண்டியடித்து உதவிகளை அனுப்பி வைத்தன ஆனால் அந்த உதவிகள் கூட இன்று உரிய இடங்களை போய் சேராமல் விமான நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இது மிகவும் கவலைக்கிடமான நிலை மட்டுமல்ல தற்போதைய நரேந்திர மோடி அரசின் கையாலாகாத்தனமும் கூட என்று ராஜதந்திர வட்டாரங்கள் குறை கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து அவர்களுடைய சுகாதார கட்டமைப்பின் சீர்குலைவு பற்றியும் அதன் சின்னாபின்னமாகி உள்ள நிலை பற்றியும் அன்றாடம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு கொரோணா நோயாளி வெளியிட்டுள்ள காணொளி
பெரும் கவலைக்கிடமான தாக மட்டுமன்றி நகைப்புக்கிடமான தாகவும் மாறியுள்ளது. ஆஸ்பத்திரி கட்டிலில் இருந்தவாறு ” ” “நான் கடந்த சில தினங்களாக இங்கு இருக்கின்றேன் எனக்கு கொரோணாவை பற்றி அச்சம் எதுவும் இல்லை. ஆனால் என்னுடைய தலைக்கு மேலாக சுழன்று கொண்டிருக்கும் இந்த மின்விசிறியை பாருங்கள். இது எந்த நேரத்தில் எனது தலையில் விழுந்து விடுமோ என்ற அச்சம் தான் என்னை வாட்டி வதைக்கின்றது. இதை சரி செய்து தருமாறு உரியவர்களிடம் பல தடவை கூறி விட்டேன் ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவே இல்லை” என்று அந்த நபர் வெளியிட்டுள்ள காட்சி இப்பொழுது வைரலாக தொடங்கியுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...