இந்திய அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் உயர்மட்ட விஞ்ஞானி

Date:

இந்தியாவில் கொரோணா தாக்கம் மிக மோசமான கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் அந்த நாட்டில் கொரோணாவின் உருமாற்றம் வீரியம், மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள், பரவல் வீச்சு, என்பன பற்றி ஆராய்வதற்காக அரசாங்கம் நியமித்த INSACOG இன்சா கொக் என்ற அமைப்பின் தலைவர் பிரபல கிருமியியல் நிபுணர் ஷஹீத் ஜமீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஷஹீட் ஜமீல்
ஷஹீட் ஜமீல்

இதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை. இருந்தாலும் ராய்ட்டர் செய்தி சேவைக்கு அவர் அளித்துள்ள தகவலில் இதற்கான காரணத்தை கூற வேண்டுமென்று அவசியமோ அல்லது கடப்பாடோ எனக்கில்லை ஆனால் இந்த பதவியில் இருந்து நான் ஒதுங்கி கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

கொரோணா வைரஸின் தாக்கங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக INSACOG என்ற உயர்மட்ட விஞ்ஞானிகளை கொண்ட அமைப்பை இந்திய அரசாங்கம் ஏற்படுத்தியது. அதன் தலைவராக பணியாற்றியவர் தான் ஷஹீத் ஜமீல் கடந்த மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே இந்த அமைப்பு இந்தியாவில் கொரோனா நிலைமை மிக மோசமான கட்டத்துக்கு வரும் பொதுக்கூட்டங்களை தடுக்கவேண்டும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தது.

ஆனால் அந்த எச்சரிக்கைகள் எதையும் இந்திய அரசாங்கம் கவனத்தில் எடுக்கத் தவறியமையே இன்றைய நிலைமைக்கு மிக மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பதே இவரின் கருத்தாக இருக்கின்றது என்று சில தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கடந்த வாரம் இது தொடர்பான ஒரு கட்டுரையை இவர் எழுதியுள்ளார்.

அந்த கட்டுரையில் விஞ்ஞான ரீதியான சான்றுகளின் அடிப்படையிலான கொள்கை வகுப்புக்கு வரமுடியாமல் இந்திய விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்பை எதிர்நோக்கி வருகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...