நேற்று நள்ளிரவு முதல் இஸ்ரேல் காஸாவில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இன்று நண்பகல் வரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி 119 பலஸ்தீனர்கள் மரணமடைந்துள்ளனர். அதில் 31 பேர் சிறுவர்கள். மேலும் 830க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் .
காஸா வடக்கில் ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்டுவரும் பாடசாலைகளில்
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். நேற்று மாலையும் இரவும் காஸாவை நோக்கி இஸ்ரேலிய யுத்த தாங்கிகளும் பீரங்கிகளும் செல் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இஸ்ரேல் தரப்பில் இதுவரை 7 பேர் மரணமடைந்துள்ளனர். அதில் ஒருவர் இந்திய பிரஜை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலதிகமாக 9000 துருப்புக்களை எல்லையை நோக்கி நகர்த்துவதற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அவசர உத்தரவு வழங்கியுள்ளார்.

இதனிடையே 24 மணி நேரத்துக்குள் காசாவை முழுமையாக தரைமட்டமாக்கும் என்று வீர முழக்கம் செய்து கொண்டு காசா நோக்கி புறப்பட்ட இஸ்ரேல் படைகள் தற்போது எல்லைப் பகுதிக்கு அப்பால் செல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் முற்றிலும் எதிர்பாராத வகையில் தென் லெபனானில் இருந்தும் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன. மற்றும் உள்நாட்டுக்குள்
பெரும் கலவரம் வெடித்துள்ளது. இஸ்ரேலிய படையினரும் போலீசாரும் மேற்கொள்ளும்நடவடிக்கைக்கு எதிராக இஸ்ரேலியர்கள் ஒரு பிரிவினர் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி அரபு குழுக்களுக்கும் யூத குழுக்களுக்கும் இடையிலும் கலவரங்கள் மூன்டுள்ளன இந்த நிலைமைகளை சமாளிக்க முடியாமல் இஸ்ரேலிய படையினர் ஒரு தடுமாற்ற நிலைக்கு வந்துள்ளதாக வே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இதனிடையே முதல்தடவையாக இஸ்ரேலை நோக்கி கடுமையான தாக்குதல்களை ஹமாஸ் இயக்கம் நடத்தி வருகின்றது. இஸ்ரேலின் விமானப்படை தளம் ஒன்றும் ரசாயன தொழிற்சாலை ஒன்றும் இரும்புத் தொழிற்சாலை ஒன்றும் ஹமாஸின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. அதேபோல் அதன் பிரதான விமான நிலையங்களில் ஒன்றான ரமோன் விமான நிலையமும் இப்பொழுது
தாக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முதல்தடவையாக இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் தங்களிடம் இருக்கும் தற்கொலை ஆளில்லா விமானங்கள் suicide drones களை
பயன்படுத்தி வருவதாக தெரிய வந்திருக்கின்றது. இதை இஸ்ரேலிய தரப்பு ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் சில தகவல்களில் நாங்கள் காணக் கூடியதாக இருக்கின்றது. அதுமட்டுமன்றி ஹமாஸ் இயக்கத்தின் சிரேஸ்ட பதில் தலைவரான சாலே அல் அரோரி இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்போது நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பது எங்களிடம் இருக்கின்ற பழைய கையிருப்புகள் முதலில் அவற்றை தீர்த்துக்கொள்வோம். அதன்பிறகு எங்களிடம் உள்ள புதிய ஆயுதங்களை நாங்கள் களத்தில் இறங்குவோம். அது இஸ்ரேலுக்கு பலத்த அதிர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அங்கு பதற்றமும் அச்சமும் மேலோங்கி இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன .





