உயர் நீதிமன்ற திருத்தங்களை சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

Date:

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் உயர் நீதிமன்ற திருத்தங்களை சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய குறித்த சட்டமூலம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) இடம்பெறவுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் எனவும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (18) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

குறித்த சரத்துக்களை திருத்தம் செய்ய வேண்டிய முறை தொடர்பிலும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்ப்பு கடந்த தினம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் சபாநாயகரால் குறித்த தீர்ப்பு இன்று (18) சபையில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...