“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு பாரிய சதி” எனின், அதற்கான விசாரணைகள் எப்போது?

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சட்டமா அதிபர் முதலில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார், அந்த தகவலில் அவர் கூறியது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இன்னும் முழுமை படுத்தப்படவில்லை அதன் காரணமாக இந்த வழக்கை தொடர முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எமக்குத் தெரியும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை வெளிவந்தது சில மாதங்களுக்கு முன்னதாக இருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம் இரண்டு வருடமாக அரசு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய விசாரணைகளை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது என்று, ஆனால் தற்போது சொல்லும் கருத்துக்கள் எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

மேலும், நீதிபதி போன்று ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்த ஒருவர் இவ்வாறான தகவல்களை வெளிப்படுத்தியது எம்மை கேள்விக்குள் ஆக்கியுள்ளது.

அதேபோன்று, எமது நாட்டின்  பிரதான ஊடகங்களுக்கு அவர் மேலும் பல தகவல்களை வெளியிட்டிருந்தார். அவர் அங்கு கூறியது “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு பாரிய சதி” பெரிய குழு ஒன்று இணைந்து இந்த சதியை செய்துள்ளனர் எனவும், சட்டமா அதிபர் கூறியிருந்தார்.

மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிலர் இதன் சிறிய பகுதியில் உள்ளவர்களே இதற்குப் பின்னால் பாரி ஒரு சதி இருக்கிறது என சட்டமா அதிபர் தெரிவித்தார்.

எனக்கு ஒரு கேள்வி எழுகிறது, இதுதொடர்பாக எப்போது இவர்கள் விசாரணை செய்யப் போகிறார்கள்?,

உண்மையிலேயே நான் தனிப்பட்ட முறையில் கார்டினலை சந்தித்து இந்த தகவலின் பிறகு நாட்டின் நிலைமை என்னவென்று,  கலந்துரையாடினோம்.

என்னவாக இருந்தாலும் நாம் இதுதொடர்பாக அவதானமாக உள்ளோம். மேலும் இறுதித் கட்ட தீர்மானத்தை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

சிறில் காமினி பெனாண்டோ (ஆயர்)

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...