உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16.58 கோடியை தாண்டியது

Date:

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16.58 கோடியை(165,857,655*) கடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோன்று கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34.44 இலட்சத்தை (3,444,901*) கடந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பமான கொரோனா வைரஸ் தொற்று பெரும்பாலான உலக நாடுகளில் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த வைரஸ் தொற்று பரவல், ஆரம்பித்து ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்துள்ளபோதிலும் இதன் வீரியம் இதுவரையிலும் குறையவில்லை. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 16.58 கோடியைக் கடந்துள்ளது.

அதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 14.65 கோடிக்கும் (146,539,738)அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1.58 கோடிக்கும் அதிகமானோர் இன்றுவரை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் 99000 க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...