எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

Date:

முஸ்லிம்கள் தங்கள் நோன்பை முடித்துவிட்டு,ஈதுல் பித்ர் ரமழான் புத்தாண்டைக் கொண்டாடும் சிறப்புமிக்க நாள் இன்று (14) ஆகும்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை, ஒரு தார்மீக சமுதாயத்தை உருவாக்குவதற்கும் தனி நபரின் ஆன்மீக தூய்மைக்கும் ஐந்து விதிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விசுவாசம் கொண்டுள்ளனர். இது ஐந்து பெரிய சக்திகள் என்றும் அழைக்கப்படுகிறது. அதன் நான்காவது சக்தியாகத் தான் நோன்பு அமைகிறது. பிற மனிதனின் துயரங்களை புரிந்து கொள்ளவும்,இறைவன் தனக்கு வழங்கிய அருட்கொடைகளிலிருந்து அதை பரஸ்பர ஒத்துழைப்புடன் அனுபவிப்பதும், தனிப்பட்ட காமத்திலிருந்து விலகி சுய கட்டுப்பாட்டுடன் நேரத்தை செலவிடுவதும் நோன்பின் பொருள்படுகிறது. அவர்கள் அந்த நோன்பை முடித்துவிட்டு, ரமழான் முடிவுறும் பிறை பார்த்து இன்று தங்கள் மத அனுசரிப்புகளை முடிக்கிறார்கள்.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த முறையும், கொரோனா பேரழிவின் மத்தியிலும் உலகெங்கிலும் கொந்தளிப்பான நேரத்தின் மத்தியிலும் முஸ்லிம்கள் நீண்ட காலமாக தங்கள் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

உலகம் ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்றும் அனைத்து மனித குலமும் மகிழ்ச்சியையும் அமைதியையும் பெற வேண்டும் என்று நாம் அனைத்து நம்பிக்கைகளின் பெயரிலும் பிரார்த்திக்க வேண்டும். இதை அர்த்தமுள்ளதாக்குவதன் மூலம், இந்த பேரழிவுகரமான காலத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி மத நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் மரியாதை செலுத்துவோம்.

மனித குலத்தின் நன்மைக்காகவும்,பாதுகாப்பிற்காகவும் எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளம் பரிசுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அந்த உன்னதமான குறிக்கோள்களைப் பின் தொடர்வதற்கான தொலை நோக்குடன் அனைத்து இலங்கையர்களுக்கும்,

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈத் முபாரக் எனும் சகலருக்கும் “அருள்பாலிக்கப்பட்ட பெருநாள் காலமாக அமையட்டும்” என்று பிரார்த்திப்போம்.

சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவரும்,

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...