ஐசிசி இன் சிறந்த வீரர் விருதுக்கு பாகிஸ்தான் வீரர்கள் பரிந்துரை!

Date:

ஏப்ரல் மாதத்துக்கான ஐசிசி இன்

சிறந்த வீரர் விருதுக்காக பாகிஸ்தா

னின் பாபர் அசாம், பகர் ஸமான்

ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை

செய்யப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான

ஒருநாள், டீ 20 தொடர்களில் சிறப்

பாகச் செயல்பட்டதன் அடிப்படை

யில் இந்த விருதுக்கு அவர்கள் பரிந்

துரைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை

(ஐசிசி) சார்பில் இந்த ஆண்டு முதல்,ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீர வீராங்கனைக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

 

 

இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம்

சிறப்பாக செயல்பட்ட மூன்று வீரர்

களுக்கான பரிந்துரை பட்டியலை

ஐசிசி வெளியிட்டது.

இதன்படி, கடந்த மாதம் நடை

பெற்ற தென்னாபிரிக்காவுக்கு

எதிரான ஒருநாள், டீ 20 தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட பாகிஸ்

தான் அணித் தலைவர் பாபர் அசாம்

மற்றும் பகர் ஸமான் ஆகிய இரு

வரும் மாதத்தின் சிறந்த வீரர் விரு

துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருநாள் தொடரின் கடைசி

போட்டியில் பாபர் அசாம் 94 ஓட்

டங்கள் விளாசி அணியின் வெற்

றிக்கு வழி வகுத்தார். அத்துடன்,

ரி 20 தொடரின் 3ஆவது போட்டி

யிலும் 59 பந்துகளில் 122 ஓட்டங்

கள் எடுத்து அணிக்கு வெற்றியை

தேடிக்கொடுத்தார்.

இதனிடையே, கடந்த மாதம்

ஐசிசி இன் ஒருநாள் தரவரிசையில்

வரலாற்றில் முதல்முறையாக 865

புள்ளிகளுடன் முதலிடத்தையும்

பாபர் அசாம் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், சக வீரரான பகர்

ஸமானும் தென்னாபிரிக்காவுக்கு

எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு

சதங்கள் விளாசியிருந்தார். அதில்

2ஆவது போட்டியில் 193 ஓட்டங்

களை எடுத்திருந்தமை குறிப்பிடத்

தக்கது.

இவர்கள் தவிர, நேபாள கிரிக்

கெட் அணியின் குஷால் புர்டெலும்

அந்த மாதத்தின் சிறந்த வீரர் விரு

துக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்து, மலேசியா அணிகளுட

னான முத்தரப்பு ஒருநாள் தொடரில்

அவர் 4 அரைச் சதங்கள் உட்பட

மொத்தமாக 278 ஓட்டங்களை

விளாசியிருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, சிறந்த வீராங்

கனைகள் பட்டியலில் அவுஸ்திரே

லிய அணியின் வீராங்கனைகளான

அலிசா ஹீலி, மெகன் ஸ்சட், நியூ

சிலாந்து வீராங்கனை லீச் காஸ்பெ

ரெக் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்

ளனர்.

ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீர

வீராங்கனைக்கான விருது வெல்ப

வர் யார் என்பதை முன்னாள் வீரர்

கள், பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு

நிறுவனங்கள் மற்றும் ரசிகர்கள் உள்

ளிட்டோர் தேர்வு செய்வார்கள்.

முன்னதாக, ஜனவரி முதல் மார்ச்

மாதம் வரையிலான ஐசிசி இன்

மாதத்தின் சிறந்த வீரருக்கான விருது

களை இந்தியாவின் ரிஷப் பாண்ட்,

ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் புவ

னேஸ்வர் குமார் ஆகிய வீரர்கள் தட்

டிச்சென்றமை மற்றுமொரு சிறப்பம்

சமாகும்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...