பொலிஸ் விஷேட அதிரடிப் படையில் நீர் மேல் சிறப்பு நடவடிக்கை பிரிவு எனும் பெயரில் புதிய உப பிரிவொன்றினை ஆரம்பிக்கும் நிகழ்வு பொல்கொடவில் நேற்று (09) ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முகக்கவசம் அணியாது காணப்பட்டார்.
சாதாரண மக்கள் பொது வெளியில் ,கடைகளுக்குள் ,வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் போது அவர்களை அள்ளி பஸ்ஸில் ஏற்றிச் சென்ற பொலிஸார் தமது திணைக்களத்தின் பொறுப்பான அமைச்சரின் இந்த செயற்பாட்டை எப்படி எடுத்துக் கொள்ள போகிறார்கள் என்பது மக்களின் கேள்வியாகும்.