நாட்டில் முதல் முறையாக நாள் ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது.
இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில், 3051 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 151,162ஆக அதிகரித்துள்ளது.