கிண்ணியா நகரசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று(11) கருப்பு நிற ஆடை அணிந்து முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைதுக்கு எதிராக கண்டனங்களை வெளியிட்டனர்.
இதேவேளை இவர்கள் கண்டன பிரேரணையை நிறைவேற்றினர் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கைதுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கிண்ணியா நகரசபை அனைத்து உறுப்பினர்களும் எதிர்ப்பை வெளியிட்டனர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் SLMC உறுப்பினர்கள் NFGG உறுப்பினர் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இதில் இணைந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைது ஒரு முறையற்ற விதத்தில் நீதிக்கு முரணான நடைபெற்றது என இங்குள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியது உடன் அவர்கள் இவரரின் கைது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர்.