குரலை அடைக்க நினைக்க வேண்டாம்! அரசாங்கத்தை எச்சரிக்கும் ஜே.வி.பி!

Date:

உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதால் அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டு விடும் என்பதற்காகவே தற்போது சுகாதார தரப்பினரும் கருத்துக்களை வெளியிடக் கூடாது அரசாங்கம் கூறுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அபாய நிலைமை தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை வெளிப்படுத்தாதிருந்தமையின் காரணமாகவே சுகாதார தரப்பினர் அவற்றை பகிரங்கப்படுத்தினர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , கொழும்பு துறைமுக நகர சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த எவரும் இனி தேசப்பற்று தொடர்பில் பேசுவதற்கு அருகதையற்றவர்கள். 2021.05.20 ஆம் திகதி நாட்டை காட்டிக்கொடுத்த நாளாகும்.

தனது இயலாமையை மறைப்பதற்காக கொரோனா நிலைமை தொடர்பில் உண்மையை வெளிப்படுத்துபவர்களின் குரலை முடக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக இவ்வாறான விடயங்களுக்கே முக்கியத்துவமளிக்கப்படுகிறது.

உண்மைகளை வெளிப்படுத்த விடாமல் கொரோனா வைரஸ் சுதந்திரமாக பரவுவதற்கு அரசாங்கம் இடமளித்துள்ளது. கொரோனா கட்டுப்படுத்தல் தொடர்பான சட்ட விதிமுறைகளை எதிர்தரப்பினரின் குரலை முடக்குவதற்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம்.

சட்ட விதிமுறைகளை மீறி அரசாங்கம் செய்யும் விடயங்களை மாத்திரம் நியாயப்படுத்திக் கொண்டு , ஏனையோரை மாத்திரம் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது. ராஜபக்க்ஷ அரசாங்கம் நாட்டை சகல வழிகளிலும் சீரழித்துள்ளது. உக்ரேன் பிரஜைகளை நாட்டுக்கு வரழைத்து இவர்களாகவே கொரோனா வைரஸை கொள்வனவு செய்துள்ளனர்.

எனவே நாட்டு மக்கள் உண்மையை உணர்ந்து அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக முன்னிலையாக வேண்டும். அத்தோடு தற்போது நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கான அரசாங்கம் கிடையாது.

எனவே பிரஜைகள் ஒவ்வொருவரும் அவர்களாகவே தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். காரணம் அரசாங்கத்தின் இலக்கு அவர்களுக்கான இலாபத்தை ஈட்டிக் கொள்வது மாத்திரமேயாகும்.

கொரோனா அபாய நிலைமை தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை வெளிப்படுத்தாதிருந்தமையின் காரணமாகவே சுகாதார தரப்பினர் அவற்றை வெளிப்படுத்தினர்.

இதன் மூலமாகவே உண்மை நிலையை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. இவ்வாறு உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதால் அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டு விடும் என்பதற்காகவே தற்போது சுகாதார தரப்பினரும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என தெரிவித்துள்ளனர். இது பொறுத்தமற்ற செயற்பாடாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...