கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ மற்றும் கடுவெல பகுதிகளிலுள்ள 8 நுழைவாயில்கள் இன்று (14) முதல் மீள திறக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அதிவேக நெடுஞ்சாலையின் பாராமரிப்பு மற்றும் நடவடிக்கை பதில் பணிப்பாளர் நிஹால் லொட்விக் தெரிவிக்கையில் , கடுவெல பகுதியிலுள்ள உட்பிரவேசிக்கும் 2 நுழைவாயில்களும் வெளியேறும் 02 நுழைவாயில்களும், கொட்டாவ பகுதியிலுள்ள உட்பிரவேசிக்கும் 02 நுழைவாயில்களும், வெளியேறும் 2 நுழைவாயில்களும் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தெற்கு அதிவேக வீதியில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள கொத்தலாவல, வெலிபென்ன மற்றும் இமதுவ ஆகிய பகுதிகளிலுள்ள நுழைவாயில்களையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.