கொரோனா வளியூடாக பரவுகிறதா? விசேட வைத்திய நிபுணர் விளக்கம்!

Date:

கொவிட் வைரஸ் வளியூடாக பரவுவதாக தெரிவிக்கப்படும் கதை வெறும் மாயையாகும் என்று வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் வளியூடாக பரவுவதாக வெளியான செய்தி தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

எந்தவொரு வைரஸும் வெளிச்சூழலில் பெருகுவதற்கு ஒருபோதும் இயலாது. கொவிட் வைரஸ் வளியூடாக  பரவுவதாக தெரிவிக்கப்படும் கதை வெறும் மாயையாகும். அதற்கான எந்தவொரு விஞ்ஞான ரீதியிலான கண்டுபிடிப்பும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

 

மாறாக வைரஸ் பெருகுவது உயிரணுக்களில் மாத்திரமாகும். அத்துடன் வைரஸ் சாதாரண உஷ்ண நிலையில் அது அழிந்துவிடும். நம் உடலுக்கு வெளியே இருந்தால் அது சுமார் 3 மணி நேரங்களில் இறந்துவிடும். அதனால் வைரஸ் எமது உடலுக்குள் செல்லாமல் அனைவரும் பாதுகாத்துக்கொண்டால் இந்த வைரஸை அழித்துவிடலாம்.

 

வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கும் நபரின் உமிழ் நீர் துளிகளினூடாக வைரஸ் வேறு நபரது சுவாசப்பை வழியாக உடலுக்குள் செல்வதற்கு முடிகின்றது. அதனால் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பேணிவருவதன் மூலம் வைரஸ் இவ்வாறு உடலுக்குள் செல்வதை தடுத்து நிறுத்தலாம்.

 

எமது கண்களினூடாகவும் வைரஸ் உடலுக்குள் செல்ல முடிகின்றது. என்றாலும் வைரஸ் ஒருசில மேற்பரப்புகளில் குறிப்பிட்ட காலத்துக்கு தங்கி இருக்க முடியும்.

 

கைகளை சவர்க்காரமிட்டு கழுவுவதன் மூலம் வைரஸ் அழிந்துவிடும். அதனால் சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதற்காக கிராம மட்டங்களில் கொவிட் குழுக்களை நிறுவி விழிப்பூட்டும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்றார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...