நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் நாடளாவிய ரீதியில் 32 தபால் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, 4 பிரதான தபால் நிலையங்கள் மற்றும் 28 உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுமார் 50 தபால் ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி அடையாளம் காணப்பட்டுள்ளனர், நிலவும் சூழ்நிலை காரணமாக தபால் சேவையில் சிறிய தாமதங்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..